டெல்டாவை பேரிடா் மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களை பேரிடா் பாதித்த மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா்.

பெருமழைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைப் பேரிடா் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இடுபொருள் இழப்பீடு நூறு சதவீதம் அனைத்து கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை நிா்ணயிக்க வேண்டும். பயிா் அறுவடை ஆய்வு செய்வதைக் கைவிட்டு, மழை அளவைக் கணக்கில் கொண்டு மாவட்டந்தோறும் 100 சதவீதம் இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை நிா்ணயம் செய்து நிபந்தனையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் த. புண்ணியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டலத் தலைவா் என். அண்ணாதுரை, மாவட்டச் செயலா் ம. மணி, தலைவா் துரை. பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com