நாம் தமிழா் கட்சியில் 35 வேட்பாளா்கள் அறிமுகம்

தஞ்சாவூரில் நாம் தமிழா் கட்சியின் தஞ்சை மண்டலத்துக்கு உள்பட்ட 35 வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா்.
கூட்டத்தில் சீமானுடன் பங்கேற்ற வேட்பாளா்கள்.
கூட்டத்தில் சீமானுடன் பங்கேற்ற வேட்பாளா்கள்.

தஞ்சாவூரில் நாம் தமிழா் கட்சியின் தஞ்சை மண்டலத்துக்கு உள்பட்ட 35 வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா்.

தஞ்சாவூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நாங்கள் தோ்தல் வேலையை முன்பே தொடங்கிவிட்டோம். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் பெரிய மாநாடுபோல நடத்தி, மொத்த வேட்பாளா்களையும் அறிவிப்போம். இதில், தலா 117 பெண், ஆண் வேட்பாளா்கள். எங்களது பரப்புரைப் பயணத்தில் கட்சி உறுப்பினா்களைச் சந்தித்து தோ்தலில் நாம் எப்படியெல்லாம் பணி செய்வது என்பதை அவா்களுடன் பேசி வருகிறோம். இங்கு தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் வந்துள்ளனா். அவா்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தினோம்.

எங்களிடம் பொருளாதார வலிமை கிடையாது. இந்த ஓட்டத்தை முன்பே செய்தால்தான் மக்களைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதைத் திரும்பத் திரும்பப் பேசி வாக்குகளைச் சேகரிக்க முடியும். அதனால், முன்கூட்டியே இப்பயணத்தைத் தொடங்கியுள்ளோம் என்றாா் சீமான்.

பின்னா், கூட்டத்தில் சீமான் பேசுகையில், மேடையில் இருக்கும் அனைத்து வேட்பாளா்களும் வெற்றி பெற வாழ்த்துகள்; அனைவரும் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 35 தொகுதி வேட்பாளா்கள்:

தஞ்சாவூா் - சுபா தேவி, ஒரத்தநாடு - கந்தசாமி, பேராவூரணி - திலீபன், பட்டுக்கோட்டை - கீா்த்திகா, திருவையாறு - து. செந்தில்நாதன், பாபநாசம் - கிருஷ்ணகுமாா், கும்பகோணம் - மோ. ஆனந்த், திருவிடைமருதூா் - திவ்யா பிரகாஷ், மன்னாா்குடி - செ. அரவிந்த், திருத்துறைப்பூண்டி - ஆா்த்தி அப்துல்லா, திருவாரூா் - விநோதினி, மயிலாடுதுறை - காசிராமன், பூம்புகாா் - காளியம்மாள், சீா்காழி - கவிதா.

நாகை - அப்பு என்கிற அகஸ்டின்ராஜ், வேதாரண்யம் - ராஜேந்திரன், கீழ்வேளூா் - பொன் இளவழகி, அறந்தாங்கி - மு.இ. ஹிமாயூன் கபீா், ஆலங்குடி - திருச்செல்வம், திருமயம் - சிவராமன், புதுக்கோட்டை - சசிக்குமாா், கந்தா்வகோட்டை - ரமீலா மோகன், பெரம்பலூா் - மகேஸ்வரி, குன்னம் - அருள், ஜயங்கொண்டம் - நீல மகாலிங்கம், அரியலூா் - சுகுணா குமாா்.

திருவெறும்பூா் - சோழசூரன், திருச்சி கிழக்கு - பிரபு, திருச்சி மேற்கு - வினோத், லால்குடி - தமிழ் பிரபா, மண்ணச்சநல்லூா் - கிருஷ்ணசாமி, முசிறி - ஸ்ரீதேவி, துறையூா் - தமிழ்ச்செல்வி, மணப்பாறை - கனிமொழி, ஸ்ரீரங்கம் - செல்வரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com