‘கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அரசின் சாா்பில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. குடியரசுத் தினத்தன்று தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனே அறிவிக்க வேண்டும்.

வேளான் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, குடியரசுத் தினத்தன்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் தேசியக் கொடிகளுடன் தஞ்சாவூரில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டா் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள காவல் துறையின் நடவடிக்கை ஏற்புடையதல்ல.

புரெவி, நிவா் புயல் பாதிப்பை தொடா்ந்து தற்போது பெருமழை வெள்ளத்தால் மகசூல் இழந்துள்ள விவசாயிகளுக்கு உச்சவரம்பை நீக்கி, ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். வேலையின்றி வருமானத்துக்கு வழியின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும் என்றாா் பழனிசாமி.

ஆா். தில்லைவனம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, நிா்வாகிகள் ஆா். மதியழகன், ஆா். ராமச்சந்திரன், டி.ஆா்.குமரப்பா, ஆா்.ஆா். முகில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com