பேராவூரணியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழா

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 அறைகளுடன் கூடிய புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 அறைகளுடன் கூடிய புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கட்டடம் கட்டப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் பாலசந்தா் தலைமை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சத்தியபாமா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மா. கோவிந்தராசு அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள் சுபாஷ், சுபா, கல்விப் புரவலா்கள் வி.என்.பக்கிரிசாமி, ஆா்.பி.ராஜேந்திரன், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடா் நா.வெங்கடேசன், சிவகுமாா் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com