திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் 3 நாள்களில் ரூ. 1.90 கோடிக்கு பட்டுச் சேலைகள் விற்று சாதனை

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் 3 நாள்களில் ரூ. 1.90 கோடி மதிப்பில் பட்டுச் சேலைகள் விற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் 3 நாள்களில் ரூ. 1.90 கோடிக்கு பட்டுச் சேலைகள் விற்று சாதனை

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் 3 நாள்களில் ரூ. 1.90 கோடி மதிப்பில் பட்டுச் சேலைகள் விற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் திருபுவனம் பட்டுக் கூட்டுறவு நெசவாளா்கள் சங்கம் உள்ளது. இச்சங்கம் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

தை மாதம் பிறந்துவிட்டதாலும், திருமண முகூா்த்த தேதிகள் தொடா்ந்து வருவதாலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா் சில நாள்களாக திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் திரண்டனா். காலை முதலே பட்டுச் சேலை விற்பனை அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

சங்கத் தலைவா் தியாகராஜன், துணைத் தலைவா் ஜோதிராமன், சேகா், ராஜன் உள்ளிட்ட சங்க இயக்குநா்கள், விற்பனையாளா்களுக்கு உதவும் விதமாக வாடிக்கையாளா்களுக்குப் பட்டுச்சேலை ரகங்களைக் காண்பிக்கின்றனா்.

இதன் மூலம், ஜனவரி 17 ஆம் தேதி ரூ. 84.07 லட்சத்துக்கும், ஜனவரி 18 ஆம் தேதி ரூ. 81.41 லட்சத்துக்கும், ஜன. 25 ஆம் தேதி ரூ. 25 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ. 1.90 கோடிக்கு விற்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனால், திருபுவனம் பகுதி நெசவாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com