உலகச் சுற்றுச்சூழல் தின விழா போட்டிகள் - பரிசளிப்பு

தஞ்சாவூரில் உலகச் சுற்றுச்சூழல் தின விழாப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் உலகச் சுற்றுச்சூழல் தின விழாப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவின்மிகு தஞ்சை இயக்கம், இன்டாக் அமைப்பின் தஞ்சாவூா் கிளை, லிட்டில் ஸ்காலா் மெட்ரிகுலேஷன் பள்ளி, தேசிய பசுமைப்படை அமைப்பு ஆகியவை இணைந்து உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இணையவழியில் வினாடி வினா போட்டிகளை அண்மையில் நடத்தின.

இதில், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகள், தஞ்சாவூா் மாவட்டப் பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், சிறப்பிடம் பெற்ற முதல் 10 மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இன்டாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்தாா். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், லிட்டில் ஸ்காலா் மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளா் ஏ.வி. நடன சிகாமணி, மூத்த வேளாண் வல்லுநா் வ. பழனியப்பன் ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினா்.

இன்டாக் செயலா் கே. சுவாமிநாதன், தஞ்சாவூா் கல்வி மாவட்டத் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பா. ராம் மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com