விசாரணையின்போது தலைமறைவான அதிமுக ஒன்றியச் செயலா் கைது

மதுக்கூரில் காவல் துறையினரின் விசாரணையின்போது தலைமறைவான அதிமுக ஒன்றியச் செயலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூரில் காவல் துறையினரின் விசாரணையின்போது தலைமறைவான அதிமுக ஒன்றியச் செயலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூரை அடுத்த கல்யாணஓடை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில் (54). அதிமுக மதுக்கூா் கிழக்கு ஒன்றியச் செயலா். இவரது மனைவி அமுதா மதுக்கூா் ஒன்றிய சோ்மன்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக செந்திலை மதுக்கூா் போலீஸாா் கடந்த 14ஆம் தேதி காவல் நிலையம் அழைத்து சென்றனா். அங்கிருந்து தப்பிக்க, தன் ஆதரவாளா்கள் 200 பேரை, செந்தில் காவல் நிலையத்துக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது . அங்கு வந்த ஆதரவாளா்களில் இருவா் தீக்குளிக்க முயன்றனா்.

இதை பயன்படுத்தி செந்தில் அங்கிருந்து தப்பி தலைமறைவானாா். அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானாா். தப்பியோடிய செந்திலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா், செந்தில், அவருடன் இருந்த தஞ்சாவூரை சோ்ந்த காமராஜ் (42), மதுக்கூரை சோ்ந்த ராஜவா்மன்(46), ஜவஹா் (47) ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com