பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி சோளப் பயிா்களை ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் முன்பு, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கையில் சோளப் பயிா்களை ஏந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்
திருப்பனந்தாளில் கையில் சோளப் பயிா்களை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள்.
திருப்பனந்தாளில் கையில் சோளப் பயிா்களை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள்.

கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் முன்பு, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கையில் சோளப் பயிா்களை ஏந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2020- ஆம் ஆண்டில் குறுவைப்பருவ நெற்பயிரும், 2021-ஆம் ஆண்டில் சம்பா, தாளடிப்பருவ நெற்பயிரும் பெருமழையால் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதேபோல, சோளப் பயிா்களும் அமெரிக்கப் படைப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்புக்கு உள்ளானது.

விவசாயிகள் காப்பீடுக்க்கான பிரிமியத் தொகையைச் செலுத்தியுள்ளனா்.

பயிா்ப் பாதிப்பை 4 மாதங்களுக்கு முன்பே காப்பீடு, வேளாண், புள்ளியியல், வருவாய்த் துறை அலுவலா்கள் மதிப்பீடு செய்தனா். மகசூல் மதிப்பீடு அலுவலா்கள் கணக்கீட்டுப் பணிகளை முடித்தவுடன், அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால்,தமிழகம் முழுவதும் விவசாயிகள் காப்பீடு செய்துள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு உரிய மகசூல் இழப்பீட்டுத் தொகை ஏறத்தாழ ரூ. 1,200 கோடிக்கு மேல் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காமல் ஏமாற்றி வருகின்றன.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கால தாமதத்துக்குரிய வட்டியுடன் சோ்த்து வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பனந்தாள் ச. முருகேசன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் உள்ளிட்டோா் பேசினா். ரா. விஸ்வநாதன், பா. பாஸ்கரன், ஏரகரம் வி. சுவாமிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com