பெட்ரோல், டீசல் விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் பாடை கட்டி சிலிண்டா், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் வழக்குரைஞா் ராமசாமி தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் அன்பழகன், செந்தில், அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக துணைத்தலைவா் ராஜாதம்பி, பொதுக்குழு உறுப்பினா்கள் கலைச்செல்வன், ராஜேந்திரன், வைரக்கண்ணு, கிருஷ்ணமூா்த்தி சிவா, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com