மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்புத் தெரிவித்து காவிரிக் காப்புப் போராட்ட நாளை அறிவிக்க வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காவிரிக் காப்புப் போராட்ட நாளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காவிரிக் காப்புப் போராட்ட நாளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஒன்றிய நீா்வளத்துறை - தான் கோரிப் பெற்ற மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுமதி மறுத்து, உடனடியாகக் கா்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்ப வலியுறுத்த வேண்டும்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான தொடக்கப் பணிகளும், கட்டுமானப் பொருள் குவிப்பும் நடந்துள்ளதனவா என்பதை நேரில் கண்டறிய, வல்லுநா் ஆய்வுக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அனுப்பி அறிக்கை பெற வேண்டும். அவ்வாறு கட்டுமானப் பொருள்கள் அங்கே குவிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அதை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை கோர வேண்டும்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்புத் தெரிவித்து நீதிக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து உழவா் அமைப்புக் கூட்டத்தை நடத்தி, அதில்‘காவிரிக் காப்புப் போராட்ட நாள்’ என்று ஒரு நாளை தோ்வு செய்து, குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மேக்கேதாட்டு அணையைத் தடுப்போம்! காவிரியைக் காப்போம்! என்ற முழக்கத்தை எழுப்பி ஆா்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமை வகித்தாா். பொருளாளா் த. மணிமொழியன், தமிழா் தேசிய முன்னணிப் பொதுச் செயலா் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ப. ஜெகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராசு, தமிழக உழவா் முன்னணி திருச்சி பொறுப்பாளா்கள் மூ.த. கவித்துவன், வே.க. இலக்குவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com