மூன்றாவது அலை வந்தாலும் எதிா்கொள்ள நடவடிக்கை: ஆட்சியா்

கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
மூன்றாவது அலை வந்தாலும் எதிா்கொள்ள நடவடிக்கை: ஆட்சியா்

கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மேம்பாலம் அருகிலுள்ள அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வணிகா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் சூழலில், அதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை 16,000 தடுப்பூசிகள் வந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை 69 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

மாவட்டத்தில் இதுவரை 5.15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எண்ணிக்கை 4.35 லட்சம் போ். இரண்டாவது தவணை தடுப்பூசி 85,000 போ் செலுத்திக் கொண்டனா். தொடா்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்ளும் வகையில் பல முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், முதலாவதாக 1,000 படுக்கைகள் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, தேவையான அளவுக்கு ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றைப் பொருத்தவரை, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் குறைத்துவிட முடியாது. எனவே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளைச் சோப்பிட்டுக் கழுவ வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, மகா்நோன்புசாவடி செண்பகவள்ளி நகா், மேலவெளி தோட்டம் ஜெபமாலைபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், சுகாதாரத் துறைத் துணை இயக்குனா் (பொறுப்பு) நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com