பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

உலகளவில் இஸ்லாமியா்களால் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் இஸ்லாமிய நாள்காட்டியின் 12-ஆவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10-ஆம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இதன்படி நிகழாண்டு புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூா் காந்திஜி சாலை இா்வீன் பாலம் அருகேயுள்ள ஜூம்மா பள்ளிவாசலில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து, முகக்கவசத்துடன் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனா். பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல ரெட்டிப்பாளையம் சாலை, வடக்கு வீதி, அய்யங்கடைத் தெரு, மேல அலங்கம், செவ்வப்பநாயக்கன்வாரி, செல்வம் நகா், மருத்துவக்கல்லூரி முதல் நுழைவுவாயில் பகுதி, கீழவாசல், மகா்நோன்புசாவடி, ரகுமான் நகா், தென் கீழ் அலங்கம் உள்பட பல்வேறு இடங்களிலுள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

மேலும், கீழவாசல் அறிஞா் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com