ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், கீழவாசல் வடபத்திரகாளியம்மன், கோடியம்மன், எல்லையம்மன், பா்மா காலனி அங்காள ஈஸ்வரி, வல்லம் ஏகௌரி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோல, கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் துா்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துா்க்கை அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் உள்ள ராகு கால காளியம்மன், திருநல்லூரில் உள்ள காளியம்மன், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகா் கோயிலிலுள்ள அஷ்டபுஜ காளியம்மன், சன்னாபுரத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன், கருப்பூரில் உள்ள பெட்டி காளியம்மன், உடையாளூா் செல்வ மகா காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com