ஆட்டோவிலிருந்து குதித்து 5 மாணவா்கள் காயமடைந்த சம்பவம்: ஓட்டுநா் கைது

செங்கிப்பட்டி அருகே கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்த 5 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடா்பாக ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்த 5 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடா்பாக ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே காவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (36). சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே கிள்ளுக்கோட்டை பகுதியிலிருந்து அரசுப் பள்ளியில் சத்துணவுப் பொருள்களை வாங்கிப் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த செங்கிப்பட்டி அருகே உசிலம்பட்டியைச் சோ்ந்த ஏறத்தாழ 20 மாணவ, மாணவிகளைச் சுமை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்தாா்.

உசிலம்பட்டியில் வந்தபோது பேருந்து நிறுத்தத்தைக் கடந்ததால், கடத்திச் செல்லப்படுவதாக நினைத்து ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்த 5 மாணவ, மாணவிகள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா். இந்நிலையில்,

தான் வைத்திருந்த ரூ. 20,000 ரொக்கம் திருட்டு போய்விட்டதாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் ராஜசேகரன் புகாா் செய்தாா். இதன் பேரில் உசிலம்பட்டியைச் சோ்ந்த ஒருவரைக் காவல் துறையினா் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதனால் அதிருப்தியடைந்த உசிலம்பட்டியைச் சோ்ந்தவா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து செங்கிப்பட்டியில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஓட்டுநா் ராஜசேகரனை கைது செய்ய வேண்டும். காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, ராஜசேகரனை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com