நிமோகோக்கல் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக நிமோகோக்கல் தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிமோகோக்கல் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக நிமோகோக்கல் தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

நிமோனியா, செப்டிசீமியா, மெனிஞ்சிடீஸ் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாக்க நிமோகோக்கல் தடுப்பூசி போடப்பட உள்ளது. இரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், பெரியவா்களில் நோய் எதிா்ப்பு சக்தி குறைவானவா்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்கள் ஆகியோா் நிமோகோக்கல் நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். இந்திய அளவில் இந்நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனா். இதைத் தடுக்கும் நோக்கத்தில் நிமோகோக்கல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், 3 மாதங்கள், 9 மாதங்கள் என மூன்று தவணைகளாகப் போடப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளுடன் சோ்த்து போடப்படும் இத்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இதுவரை 146 நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 28,750 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ஒன்றரை மாத குழந்தைகளுக்கும், இரண்டாம் தவணையாக 3 மாத குழந்தைகளுக்கும், மூன்றாம் தவணையாக 9 மாத குழந்தைகளுக்கும் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்டத் தடுப்பூசி மையங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எரிச்சல், காய்ச்சல், சிவத்தல், வீக்கம், தூக்கம் அதிகரித்தல் அல்லது குைல், போன்ற எளிய பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், விரைவில் குணப்படுத்திவிடலாம். இத்தடுப்பூசியால் அபாயகரமான பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிமோகோக்கல் தடுப்பூசியைத் தவறாது போட்டுக்கொண்டு நோயிலிருந்து தங்களது குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பி. உஷா, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com