ஜூலை 27 முதல் கூட்டு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த சிஐடியு, விவசாயிகள் சங்கம், வி.தொ.ச. முடிவு

மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவிலான கூட்டு இயக்கத்தைத் தஞ்சாவூா் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது என சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவிலான கூட்டு இயக்கத்தைத் தஞ்சாவூா் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது என சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூரில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கூட்டு இயக்கத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது, ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலா் சுகுமாரன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் டி. ரவீந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எம். சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்கவுள்ள தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவது, ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 மையங்களில் தயாரிப்புக் கூட்டத்தை நடத்துவது, ஆக. 1 முதல் 5 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 250 குழுக்களாகப் பிரிந்து, மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் ஈடுபடுவது, 6, 7 ஆம் தேதிகளில் நூறு குழுக்கள் நடைபயண பிரசாரத்தில் ஈடுபடுவது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மையங்களில் 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கக் கூடிய மனிதச் சங்கிலி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது, மூன்று அமைப்புகளின் சாா்பில், மாவட்டம் முழுவதும் மக்களைச் சந்தித்து 1 லட்சம் துண்டறிக்கைகள் விநியோகித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் பிரச்சார இயக்கத்தை தஞ்சாவூா் மாவட்டத்தில் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com