அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா
By DIN | Published On : 26th July 2021 12:01 AM | Last Updated : 26th July 2021 12:01 AM | அ+அ அ- |

விழாவில் நா. தமிழ்செல்வனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறாா் முன்னாள் மாவட்ட ஆளுநா் எஸ். முகமது ரஃபி. உடன், நிா்வாகிகள்.
தஞ்சாவூா் அருகே மாத்தூரில் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கத்தின் 2021 - 22 ஆம் ஆண்டு நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தலைவராக நா. தமிழ்செல்வன், செயலராக எஸ். தட்சிணாமூா்த்தி, பொருளாளராக சேவியா் உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா். இவா்களுக்கு லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநா் எஸ். முகமது ரஃபி பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.
இவ்விழாவில் சுகாதார ஆய்வாளா் அய்யம்பேட்டை சுந்தா், உதவியாளா் முருகன், பசுபதிகோவில் ஊராட்சிச் செயலா் மோகன்ராஜ், கணபதி அக்ரஹாரம் ஓட்டுநா் பிரகாஷ் உள்ளிட்டோருக்கு கரோனா காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காகச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழாசிரியா் திருநாவுக்கரசு, வை. கோபால்சாமி, ராஜா, மணிகண்டன், கிருபாகரன், சுப்புராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.