தஞ்சாவூரில் ஒன்றிய அரசுக்கு எதிரான பிரசார இயக்கம் தொடக்கம்

தஞ்சாவூரில் ஒன்றிய அரசுக்கு எதிராக சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முழக்கங்கள் எழுப்பிய சிஐடியு, விவசாயிகள் சங்கத்தினா், விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முழக்கங்கள் எழுப்பிய சிஐடியு, விவசாயிகள் சங்கத்தினா், விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

தஞ்சாவூரில் ஒன்றிய அரசுக்கு எதிராக சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய விவசாயத்தை காா்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கக் கூடாது. விவசாயத்தை அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் செவ்வாய்க்கிழமை முதல் ஆக. 8 ஆம் தேதி வரை சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடைபெற உள்ளது.

இதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலா் ஜி. சுகுமாரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் கே. அபிமன்னன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் ம. கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் பி.என். போ்நீதி ஆழ்வாா், நிா்வாகிகள் இ.டி.எஸ். மூா்த்தி, த. முருகேசன், கே. அன்பு, கே. பாலமுருகன், எஸ். செங்குட்டுவன், கே. கல்யாணி, எஸ். மில்லா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com