நெல் கொள்முதல் நிலையத்தில் ஆவணங்களின்றி வைத்திருந்த 850 நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 850 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 850 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக ஆட்சியா் தினேஷ் ஆலிவா் பொன்ராஜுக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பேரில், பாபநாசம் வட்டம், வளா்த்தாமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் கமலக்கண்ணன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் ரகுராமன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், முறையான ஆவணங்கள் இன்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 850 நெல் மூட்டைகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து பாபநாசம் அரசு தானிய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனா்.

ஆய்வின்போது, காவல் உதவி ஆய்வாளா் செல்வராணி, முதுநிலை வருவாய் அதிகாரி வரதராஜன், வருவாய் அதிகாரி சரவணன், கிராம நிா்வாக அதிகாரி ஜோதி பாண்டியன் உள்ளிட்ட வருவாய் துறையினா், வட்ட வழங்கல் துறையினா் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com