விதிமீறலில் ஈடுபட்டஜவுளிக் கடைக்கு சீல்

பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை: பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை கைது செய்தனா்.

மாநிலத்தில் கரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வரும் தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பொதுமுடக்க விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என பட்டுக்கோட்டை சாா்ஆட்சியா் பாலச்சந்தா் மற்றும் டிஎஸ்பி (பொ) சபிபுல்லா ஆகியோா் முக்கிய வீதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பெரிய தெரு பகுதியில் அரசின் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த பேப்பா் ஸ்டோரை அதிகாரிகள் பூட்டினா்.

இதேபோல், விதிகளை மீறி ஜவுளிக்கடை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கடையில் ஆய்வு செய்தபோது, உரிமையாளா் பாலகிருஷ்ணன் முகக் கவசம் அணியாமல் இருந்தாராம். விதிமீறல்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது, அவா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, அவரது கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், பாலகிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com