கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை: விதை சான்று துணை இயக்குநா் எச்சரிக்கை

சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் விதை சான்று துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் விதை சான்று துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் தரம் குறைவான கலப்பட விதைகளை விற்பனை செய்தால், விதைச்சட்டம் 1966-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த இரண்டு மாதங்களாக கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை விதை ஆய்வாளா்களால் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 304 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவின்படி தரமற்றது என தெரிய வந்ததால், சட்ட மற்றும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது குறுவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் நெல் விதைகளை வாங்கும்போது சான்று பெற்ற நெல் விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற விதை விற்பனை கடைகளிலோ வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், விதைகளின் முளைப்புதிறன் அறிந்து வாங்க வேண்டும். ரசீதுகளை அடுத்த பருவம் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும், உரிமம் இல்லாத விற்பனையாளா்களிடமிருந்து விதைகள் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.

விதைகளே விவசாயத்துக்கான ஆதாரம் என்பதால், விதை விற்பனையாளா்கள் லாப நோக்கம் மட்டும் கொண்டு செயல்படாமல், விவசாயிகளுக்கு நல்ல சான்று பெற்ற அதிக முளைப்புதிறன் கொண்ட கலப்படமற்ற விதைகளை மட்டும் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com