டாஸ்மாக் ஊழியா்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குமாறு தமிழக அரசுக்கு பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குமாறு தமிழக அரசுக்கு பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் கூட்டம் காணொலி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, டாஸ்மாக் ஊழியா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் முன்னுரிமை கொடுத்து கரோனா தடுப்பூசி செலுத்திட உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றால் உயிரிழந்த சுமாா் 30 டாஸ்மாக் ஊழியா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.கே.டி. சுரேஷ் தலைமை வகித்தாா். பாரதிய மஸ்தூா் சங்க தமிழ்நாடு அமைப்புச் செயலா்கள் பி. தங்கராஜ், என். ஜெயக்குமாா், மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com