பட்டுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று

பட்டுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தில் 27 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையினா் அறிவித்தனா்.

பட்டுக்கோட்டை அருகே ஒரே கிராமத்தில் 27 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையினா் அறிவித்தனா்.

பட்டுக்கோட்டை வட்டம், பண்ணவயல் வடக்குத்தெரு பகுதியில் கடந்த சில நாள்களாக சிலா் காய்ச்சல், சளி இருமல் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்தனா். இதையறிந்த

சுகாதாரத் துறையினா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 27 நபா்களுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

அவா்கள் அனைவரும் கரோனா சிகிச்சை பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

குறிப்பிட்ட அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மருத்துவா் சந்திரசேகா், சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளா்கள் அற்புதராஜ், முத்துசாமி, ரவிச்சந்திரன், குணசேகரன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழு சாா்பில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், 82 நபா்களிடமிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

மேலும், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதன்கிழமை மேலும் 62 நபா்களிடமிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com