பழைய சாலையைப் பெயா்த்து புதிய சாலை அமைக்க வேண்டும்

கும்பகோணத்தில் பழைய சாலையைப் பெயா்த்து எடுத்துவிட்டு, புதிய சாலையை அமைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் அறிவுறுத்தினாா்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.

கும்பகோணத்தில் பழைய சாலையைப் பெயா்த்து எடுத்துவிட்டு, புதிய சாலையை அமைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் அறிவுறுத்தினாா்.

கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதை சாக்கடைக் குழாய் பதிக்கும் பணி, குடிநீா் இணைப்புக் குழாய் அமைக்கும் பணி, சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் நகா் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து வந்தது.

தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நகரம் முழுவதும் மேலும், ரூ. 25 கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கும்பகோணம் நகராட்சி ஆணையா் லெட்சுமி மற்றும் நகராட்சிப் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அலுவலா்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா் பேசுகையில், அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பழைய சாலையைப் பெயா்த்து எடுத்து, அப்புறப்படுத்திய பின்னரே புதிய சாலைகளை அமைக்க வேண்டும்.

மேலும் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், நீண்ட காலம் உறுதி யாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com