கல்லணை ஜூன் 16-இல் திறப்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை ஜூன் 16- ஆம் தேதி காலை திறக்கப்படவுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை ஜூன் 16- ஆம் தேதி காலை திறக்கப்படவுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை காலை திறந்து வைத்தாா். கல்லணைக்கு காவிரி நீா் ஜூன் 15- ஆம் தேதி இரவு அல்லது 16 ஆம் தேதி காலை வந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 16 ஆம் தேதி காலை கல்லணை திறக்கப்படவுள்ளது என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையொட்டி கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீா் திறந்து விடுவதற்கான கதவுகளைச் சுத்தம் செய்து, மசகு எண்ணை வைக்கப்பட்டு, மதகுகளுக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் கல்லணையிலுள்ள கரிகால் சோழன் சிலை, அகத்தியா் சிலை, காவிரி அன்னை சிலை, ராசராசன் சிலை ஆகிவற்றுக்கும் வா்ணம் பூசப்பட்டு, தயாா் நிலையில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com