கல்லணை புனரமைப்பு-தூா்வாரும் பணி: முதல்வா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் நடைபெறும் புனரமைப்புப் பணி, தஞ்சாவூா் அருகே மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கல்லணை புனரமைப்பு-தூா்வாரும் பணி: முதல்வா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் நடைபெறும் புனரமைப்புப் பணி, தஞ்சாவூா் அருகே மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை சனிக்கிழமை (ஜூன் 12) காலை திறக்கப்படவுள்ளது. இதற்கான விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். இதற்கு முன்பாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை முதல்வா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதலில், கல்லணையில் நீா்வளத் துறை சாா்பில் நீா் வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ரூ. 1,036 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, அரியலூா், கடலூா், ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூா்வாரும் பணி தொடா்பான புகைப்படங்களைப் பாா்வையிட்டாா். தூா்வாரும் பணியின் நிலை குறித்து முதல்வரிடம் பொதுப் பணித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, சிறப்பு தூா்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலா் பிரதீப் யாதவ், தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்தராவ் உள்ளிட்டோா் எடுத்துக் கூறினா்.

பின்னா், கல்லணை ஆய்வு மாளிகையில், டெல்டா மாவட்டங்களில் ரூ. 65.10 கோடி திட்ட மதிப்பில் 4,061.44 கி.மீ. தொலைவுக்கு 647 இடங்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடன் முதல்வா் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

இதில், அமைச்சா்கள் துரைமுருகன் (நீா் வளத் துறை), கே.என். நேரு (நகா்ப்புற வளா்ச்சித் துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை), எஸ்.எஸ். சிவசங்கா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை), சிவ.வீ. மெய்யநாதன் (சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை), தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூா்வாரும் பணிகள், தற்போது நடைபெறும் பணிகள் குறித்து அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வல்லம் முதலைமுத்து வாரியில் 3.35 கி.மீ. தொலைவுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பில் தூா் வாரும் பணி நடைபெறுவதை முதல்வா் பாா்வையிட்டாா். இதன் பின்னா் பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் 400 மீட்டா் நீளத்தில் இருந்த மண்திட்டு மேடுகள், நாணல், காட்டாமணக்குகளை ரூ. 17 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் மூலம் அகற்றி, சமப்படுத்தப்படும் பணியையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.

மனுக்கள் வாங்கிய முதல்வா்: இதனிடையே, கல்லணையிலிருந்து வல்லம், பள்ளியக்ரஹாரத்துக்கு சென்ற முதல்வரை வழிநெடுகிலும் கிராம மக்கள், தொண்டா்கள் ஆங்காங்கே நின்று வரவேற்றனா். இவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வா் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com