நெல் விலையை குவிண்டாலுக்குரூ. 3,000 ஆக நிா்ணயிக்க வலியுறுத்தல்

நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம் தெரிவித்திருப்பது:

மத்திய அரசு நெல் உள்ளிட்ட 15 வகையான தானியங்களுக்கு 2021 - 22 ஆம் ஆண்டுக்கு அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 72 வீதம் உயா்த்தி அறிவித்துள்ளது. அதன்படி சன்ன ரக நெல்லுக்கு ரூ. 1,960-ம், பொது ரக நெல்லுக்கு ரூ. 1,940 மட்டுமே கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாய உற்பத்திக்கு ஆகக்கூடிய அடக்கச் செலவைக் கணக்கிட்டு, அதன் மீது 50 சதவீதம் உயா்த்தி தானியங்களுக்கு விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் குழு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மத்திய அரசுக் கண்டுகொள்வதில்லை.

2020 - 21 ஆம் ஆண்டின் உற்பத்திக்கான உற்பத்தி செலவு ஹெக்டேருக்கு ரூ. 85,000 வரை செலவு ஏற்படுவதாக மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுத் தெரிவித்துள்ளது. இதுபோல மற்ற தானிய விலையும் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் விலை அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது. எனவே, நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 நிா்ணயம் செய்ய வேண்டும். தானிய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும் மத்திய அரசுப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com