தில்லியில் 200 நாள்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் தமிழ்நாடு உழவா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் 200 நாள்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு உழவா் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு உழவா் இயக்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு உழவா் இயக்கத்தினா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் 200 நாள்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு உழவா் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் வரைவு திட்டம் உள்பட விவசாயிகளுக்கு, மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ காா்பன், மீத்தேன் உள்ளிட்ட விவசாயிகளை விளைநிலத்தில் இருந்து வெளியேற்றுகிற, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் திட்டத்துக்குத் தற்போது நெடுவாசல், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் அனுமதி அளித்துள்ள மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், அத்திட்டங்களைக் கைவிட வேண்டும்.

விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுடன் ஆணையம் கலந்து பேசி விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், விவசாயிகள் சங்கப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பி. செந்தில்குமாா், வீர. மோகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் என். குருசாமி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் அருண்சோரி, மகஇக மாநகரச் செயலா் இராவணன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் கோ. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com