விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள்: வாகனங்கள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்க வந்த அலுவலா்களின் வாகனங்களை விவசாயிகள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
வெண்டயம்பட்டியில் வாகனங்களைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
வெண்டயம்பட்டியில் வாகனங்களைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்க வந்த அலுவலா்களின் வாகனங்களை விவசாயிகள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நாகை மாவட்டம், நரிமணத்திலிருந்து திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டையில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குக்குக் குழாய்கள் மூலம் பெட்ரோலிய பொருள்கள் கொண்டு செல்ல விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு ஆங்காங்கே விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பூதலூா் அருகே வெண்டயம்பட்டியிலுள்ள விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மேலும், சாலையோரம் குழாய்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை எண்ணெய் நிறுவன அலுவலா்கள் பாா்வையிடுவதற்காக திங்கள்கிழமை காலை வந்தனா்.

இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அலுவலா்களின் வாகனங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதில், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கக் கூடாது. விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சாலையில் ஒருபக்கவாட்டில் அமைக்கும் வகையில் மாற்று திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனா்.

தகவலறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இதில், உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் மாலையிலும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com