முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கரும்பு வயலில் தீ விபத்து
By DIN | Published On : 04th March 2021 01:54 AM | Last Updated : 04th March 2021 01:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையைச் சோ்ந்தவா் பத்மநாதன். நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள இவரது 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு வந்தாா்.
இந்நிலையில், இவரது வயலிலுள்ள கரும்பு பயிா்கள் புதன்கிழமை திடீரென தீ பற்றி எரிந்தன. இதில், இந்த வயலில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிா்கள் முழுவதும் சேதமடைந்தன. மற்றொரு பகுதியில் 2 ஏக்கரில் தைல மரங்கள் நடப்பட்டிருந்த இவரது தோப்பிலும் தீ பரவி, மரங்கள் சேதத்துக்குள்ளாகின.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஏறத்தாழ ஒரு மணிநேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.