முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மருத்துவா் ஜீவானந்தம் மறைவு:தஞ்சையில் இரங்கல் கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 01:56 AM | Last Updated : 04th March 2021 01:56 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் ரயிலடியில், ஈரோடு மருத்துவரும், தமிழகப் பசுமை இயக்கத் தலைவருமான வெ. ஜீவானந்தம் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் தலைமை வகித்தாா். இதில், ஜீவா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்ராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீர. மோகன், இந்திய மாணவா் சங்கத் தலைவா் ஜி. அரவிந்தசாமி, சிஐடியு மணிமாறன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, தமிழக இளைஞா் இயக்க மாநகரத் தலைவா் ஜான், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன், தொலைபேசி ஓய்வு பெற்றோா் சங்க பீா்முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.