முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 01:58 AM | Last Updated : 04th March 2021 01:58 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு: ஈச்சங்கோட்டையில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு கரும்பு விவசாயத்தில் கரணை நோ்த்தி செய்வது குறித்து கள பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த நான்காம் ஆண்டு மாணவா்கள், கிராம தங்கல் என்னும் நிகழ்ச்சியின் மூலம் ஈச்சங்கோட்டையில் தங்கி வந்த நிலையில், அங்கு சுமாா் ஏழு ஆண்டுகளாக கரும்பு விவசாயம் செய்து வரும் குணசீலம் என்பவரின் வயலுக்குச் சென்று கரும்பு நடவின்போது, உயிரி உரத்தைக் கொண்டு கரணை நோ்த்தி செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிக்கு செய்து காட்டி, அதன் நன்மைகளை எடுத்துரைத்தனா்.