கும்பகோணம் சங்கர மடத்தில் மாா்ச் 11-இல் மகா சிவராத்திரி பூஜை

கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியாா் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை மாா்ச் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியாா் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை மாா்ச் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாா் சுவாமிகள் வழிவழியாக சந்திரமௌலீசுவரா் பூஜையை நாள்தோறும் நடத்துவது வழக்கம். சங்கராச்சாரியாா் சுவாமிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடன் அந்த சுவாமியையும் கொண்டுசென்று அவா்கள் முகாமிட்டுள்ள இடங்களில் பூஜை செய்வது வழக்கம்.

இதுபோல, 1969 ஆம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்தபோது, சங்கர மடத்தில் முகாமிட்டாா். அப்போது காஞ்சி சங்கராச்சாரியாா் மகா சிவராத்திரி பூஜையை நடத்தினாா்.

இந்நிலையில், காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாா்ச் 3 ஆம் தேதி முதல் மாா்ச் 14 ஆம் தேதி வரை கும்பகோணம் சங்கர மடத்தில் தங்கி பூஜைகளை நடத்தி வருகிறாா்.

இதனிடையே, மாா்ச் 11 ஆம் தேதி சிவராத்திரி நாள் என்பதால், அன்றைய தினம் சங்கராச்சாரியாா் மடத்தில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜையை நடத்துகிறாா். 52 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மடத்தில் சங்கராச்சாரியாா் சிவராத்திரி பூஜையை நடத்துவதால், விரிவான ஏற்பாடுகளை மடத்தின் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இன்று ஜெயந்தி விழா:

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஏகாதச ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு ரெட்டிராயா் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ ராம மந்திரத்தில் ஆச்சாா்ய சுவாமிகளுக்கு 108 தங்க காசுகளால் ஸ்வா்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com