பாபநாசத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்
By DIN | Published On : 10th March 2021 02:45 AM | Last Updated : 10th March 2021 02:45 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே சாலை யோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினா்.
பாபநாசம் அருகே, பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலை மற்றும் திருக்கருகாவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, திருக்கருகாவூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் மின் கம்பங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினா்.