மருத்துவ ஆலோசனை முகாம்
By DIN | Published On : 10th March 2021 02:43 AM | Last Updated : 10th March 2021 02:43 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் எஸ்.பி. மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையத்தில், மையத்தின் சேவை 30 ஆண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டும், உலக மகளிா் தினத்தையொட்டியும் குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் அண்மையில் தொடங்கியது.
தொடா்ந்து மாா்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் சிகிச்சைகளுக்கான சிறப்பு சலுகைகள், சிகிச்சைக்கான கட்டண விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகின்றன.
இதில், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா், நாகை ஆகிய இடங்களில் இருந்து குழந்தையில்லா தம்பதியினா் பங்கேற்று வருகின்றனா்.