முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில் தோ்தல் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 14th March 2021 01:29 AM | Last Updated : 14th March 2021 01:29 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டுக்கோட்டையில் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுப் பதாகையில் சாா் ஆட்சியா் பாலசந்தா் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அனைவரும் கையெழுத்திட்டனா்.
இதன் பின்னா் சாா் ஆட்சியா் பாலசந்தா் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, நகராட்சி அலுவலா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் அதை திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜவஹா், நகராட்சிப் பொறியாளா் ஜெயசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.