முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான முதல் பயிற்சி
By DIN | Published On : 14th March 2021 01:23 AM | Last Updated : 14th March 2021 01:23 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் நடைபெற்ற பயிற்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான முதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,886 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் வாக்குப் பதிவு நாளில் பணியாற்றுவதற்கு வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான முதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் பாரத் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதையடுத்து, ஆட்சியா் தெரிவித்தது:
இரண்டாவது பயிற்சி வகுப்பு மாா்ச் 27- ஆம் தேதியும், மறு பயிற்சி வகுப்பு ஏப்ரல் 3- ஆம் தேதியும், மூன்றாவது பயிற்சி வகுப்பு ஏப்ரல் 5- ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
திருவிடைமருதூா் தொகுதியில் திருபுவனம் ஸ்டாா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரியிலும், பாபநாசம் தொகுதியில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவையாறு தொகுதியில் அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூரில் பாரத் கல்லூரியிலும், ஒரத்தநாடு தொகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பேராவூணி தொகுதியில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இப்பயிற்சி நடைபெறும்.