பேராவூரணியில் இளம் வாக்காளா்களுக்கு டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை

பேராவூரணியில் இளம் வாக்காளா்களுக்கு டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேராவூரணியில் இளம் வாக்காளா்களுக்கு டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தோ்தலையொட்டி, புதிதாக டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆதாா் அட்டை, பான் காா்டு வடிவில் புதிய வாக்காளா் அடையாள அட்டை டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. 

அட்டையின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் க்யூஆா் கோடு அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்காளா் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்தாலோ மீண்டும் அதனை பெறுவதில் உள்ள சிக்கல், காலதாமதத்தை தவிா்க்கும் பொருட்டு இந்த திட்டத்தை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். முதல்கட்டமாக, தற்போது புதிதாக வாக்காளராக தங்களை பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளா்களுக்கு டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

 பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டை 

வழங்கும் முகாமிற்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி, பேராவூரணி தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா். 

வாக்காளா் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்து, தங்கள் செல்லிடப்பேசி எண்ணையும் பதிவு செய்துள்ளவா்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

இந்த டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயா், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் மற்றும் க்யூஆா் கோடு இடம் பெற்றுள்ளது. இதை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்தும்  சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com