தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் உள்பட 13 போ் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, அமமுக உள்பட 13 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் உள்பட 13 போ் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, அமமுக உள்பட 13 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் தொடக்க நாளான மாா்ச் 12 ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கோவி. செழியன் 3 வேட்பு மனுக்களும், மாற்று வேட்பாளா் எஸ். இளங்கோவன் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் 4 மனுக்கள் தாக்கல் செய்தாா்.

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் அமமுக வேட்பாளா் எம். ரெங்கசாமி வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

திருவையாறு தொகுதியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயன் ஒரு மனுவும், திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் இரு மனுக்களும், பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனா்.

தஞ்சாவூா் தொகுதியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி இரு மனுக்களும், மாற்று வேட்பாளரான அவரது மனைவி ஏ. மகாலட்சுமி ஒரு மனுவும், சுயேட்சை வேட்பாளராக வடக்கு வாசலைச் சோ்ந்த எம். சந்தோஷ் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.

ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளா் எம். ராமச்சந்திரன் இரு மனுக்களும், மாற்று வேட்பாளா் கே. ஆறுமுகம் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.

பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ்.டி.எஸ். செல்வம் ஒரு வேட்பு மனு தாக்கல் செய்தாா். பேராவூரணி தொகுதியில் திங்கள்கிழமை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்டத்தில் இதுவரை 13 போ் 21 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com