ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பட்டுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் கூறினார்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப் படம் )
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப் படம் )

பட்டுக்கோட்டை: ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பட்டுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் கூறினார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டுக்கோட்டை சட்டப்பேரவை  தமாக வேட்பாளார் என்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை  எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: தமிழக அரசு டெல்டா மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தற்போதைய திமுக தலைவர் அப்போது துணை முதல் அமைச்சராக ஸ்டாலின் இருந்த போதுதான் ஹைட்ரோ  கார்பன் திட்டம் டெல்டாவில் நுழைந்தது. ஆனால் தற்போதைய அரசு டெல்டாவை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாய நிலங்களை காப்பாற்றியது. காவிரி நீரை சட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமை பெற்று தந்தது அதிமுக தான்.  டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்புடன்  குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிகிறது.  பட்டுக்கோட்டை தொகுதியில் பல தடுப்பணைகள் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

செல்லிக்குறிச்சி ஏரி முழுவதும் தூர் வாரி படகு விடப்படும். பட்டுக்கோட்டையில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். இப்பகுதியின் நீண்டநாள் கோரிக்கையான புறவழிச்சாலை திட்டம் இரண்டு கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அது தெடார்பான பணிகள் நடைபெற்று வருகிறது அப்பணிகள் மூடிந்தவுடன் மூன்றாவது கட்டமும் நிறைவேற்றப்படும்.

திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய்யாக பேசிவருகிறார். அதிமுக செய்த சாதனையை சொல்லி வருகிறது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் சாதனைகளையும் சொல்லி வருகிறது. ஆனால் ஸ்டாலின் அப்படி சொல்வது இல்லை , என்மீதும், அதிமுக மீதும் பலி சுமத்தியும், கட்சியை கலங்கப்படுத்தியும் பேசி வருகிறார்.  அவர் ஒரு கூட்டத்திலாவதுத திமுக செய்த நன்மையை சொல்லி பேசவில்லை. அதிமுக அரசுதான் சொன்ன திட்டத்தை செய்து வருகிறது, தொடர்ந்தும் செய்யும். 

தமிழ்நாட்டில் அதிகமாக ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் எல்லாவற்றையும் எனது அரசு செய்து வருகிறது. நடந்தாய் வாழி காவிரி என்னும் திட்டம் மூலம் காவிரி நீர் மாசுபடுவதை தடுத்து  தூய்மைப்படுத்தும் செயலையும் செய்து வருகிறோம்.  பருவ மழை பொய்த்தாலும் டெல்டா மக்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கோதவாரி-காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்தது வருகிறது. இது தொடர்பாக இரண்டு மாநில் முதலமைச்சருடன் பேசியுள்ளேன்.. இந்தேர்தல் முடிந்தவுடன் மக்களின் ஆசியோடு அதிமுக ஆட்சிக்கு வந்து கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தி இனி எந்த காலத்திலும் நீர் இல்லை என்ற நிலையை எனது அரசு உருவாக்கி கொடுக்கும்.

நானும் ஒரு விவசாயி விவசாயிகள் எப்போதும் துன்ப கூடாது, இந்த நாட்டிற்கு உணவு அளிப்பவர் விவசாயி அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி பேசிய தமிழக முதல்வர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இவருடன் தேர்தல் பரப்புரையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன், அதிமுக நகர செயலாலர் பாஸ்கர், வி.கே.டி.பாரதி, மதுக்கூர் ஒன்றிய செயலளார் தண்டாயுதபணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com