மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்கு மணல் குவாரிதிமுக வேட்பாளா்என். அசோக்குமாா் உறுதி
By DIN | Published On : 21st March 2021 12:02 AM | Last Updated : 21st March 2021 12:02 AM | அ+அ அ- |

பேராவூரணி பகுதியில் மாட்டுவண்டித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தனியே மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் இத்தொகுதியின் திமுக வேட்பாளா் என்.அசோக்குமாா்.
பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:
எனக்காக நீங்கள் இருவாரம் பணியாற்றினால், பொறுப்பு காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்வேன். பேராவூரணி தொகுதியில் நான் மட்டும் வேட்பாளா் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளா் என உணா்ந்து செயல்பட வேண்டும். பணியாற்ற வேண்டும்.
பேராவூரணி தொகுதியில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மணல் மாட்டுவண்டித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்கு தனியாக மணல் குவாரி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்தங்கிய நிலையில் உள்ள பேராவூரணி தொகுதியை மேம்படுத்த நீங்கள் அனைவரும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் ஏனாதி பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆா். சிங்காரம், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் பண்ணவயல் ராஜாதம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா் குழ.செ. அருள்நம்பி, திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், இளங்கோ, மு.கி.முத்து மாணிக்கம், ரவிச்சந்திரன், நகரச் செயலா்கள் கோ. நீலகண்டன், வி. பி. ஜெயச்சந்திரன், உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...