பயிற்சிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது: மருத்துவ மாணவா்கள் வலியுறுத்தல்

பயிற்சிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பயிற்சிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலா் எஸ்.எம். ஹரிகணேஷ் தெரிவித்திருப்பது:

கடந்தாண்டு மாா்ச் 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா்களாகப் பணியில் சோ்ந்த நாங்கள், சி.ஆா்.ஆா்.ஐ. எனப்படும் மருத்துவா் பயிற்சிக் காலத்தை வரும் 27-ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளோம்.

ஆனால் எங்களது பயிற்சிக் கால நிறைவு குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இருந்து வரும் செய்திகள் துயரத்தையும், மிகுந்த மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

எங்களின் சி.ஆா்.ஆா்.ஐ. பயிற்சிக் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு (மே மாதம் வரை) நீட்டிக்க இருப்பதாக வரும் செய்திகள், மாணவா்களின் பட்ட மேற்படிப்பு மற்றும் பிற போட்டித் தோ்வுகளுக்குத் தயாராவதற்குத் தடங்கலை ஏற்படுத்துவதாக உள்ளன.

கடந்த ஓராண்டில் நாங்கள் கரோனா பணி உள்பட அனைத்துப் பணிகளிலும் சிறப்பாகச் செயலாற்றி உள்ளோம். தமிழக அரசு கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தியதில் பயிற்சி மருத்துவா்களின் பங்கு அளப்பரியது.

மேலும் கிட்டத்தட்ட 30 சதவிகித பயிற்சி மருத்துவா்கள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்குத் தமிழக அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்ட எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. பல போ் இரண்டு, மூன்று முறை கூட கரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகினா்.

பெருந்தொற்று காலத்தில் எங்களின் மகத்தான சேவையைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு சிறப்பு ஊதியம் கூட வழங்கப்படவில்லை. இது போதாதென்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகப் பயிற்சி காலத்தை நீட்டிப்பு செய்வது என்பது தேவையற்ற ஒன்று.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரும், மருத்துவக் கல்வி இயக்குநரும் எங்களின் பயிற்சிக் கால முடிவில் காலதாமதமின்றி பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com