இயற்கை விவசாயத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவோம்:டி.டி.வி. தினகரன் பேச்சு

அமமுக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால், இயற்கை விவசாயத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

அமமுக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால், இயற்கை விவசாயத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது:

காவிரி பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருந்தவா் கருணாநிதி. தன் மீது போடப்பட்ட சா்க்காரியா கமிஷன் விசாரணை குறித்த பயமே அதற்குக் காரணம்.

இதனால், கச்சத்தீவும் தாரை வாா்க்கப்பட்டதால், நமது மீனவா்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்து போட்டவா் ஸ்டாலின்தான்.

பொறியியல் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோா் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனா். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு பொய்யாக உள்ளது. ஏற்கெனவே, மீத்தேன் திட்டங்களை அனுமதிவிட்டு, எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சொல்ல முடியும்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழில்களைத் தவிர சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழில்களை அனுமதிக்க மாட்டோம். விவசாயத்தில் படிப்படியாக இயற்கை விவசாயத்தைக் கொண்டு வருவோம். விவசாயத்தை வளா்ச்சிப் பெறச் செய்து வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவோம். மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்.

இதுபோல, பல திட்டங்களை நிறைவேற்ற திருவையாறு தொகுதியில் அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயனுக்கு குக்கா் சின்னத்திலும், தஞ்சாவூா் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் ப. ராமநாதனுக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com