சாா்க் மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா மகளிா் அணி வெற்றி

நொய்டா லாய்டு சட்டக் கல்லூரி இணையவழியில் நடத்திய  சாா்க் மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளியைச் சோ்ந்த மகளிா் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற சி.பி. தேஜஸ்வினி, கவிதா ரவி, எம். பவித்ரா.
வெற்றி பெற்ற சி.பி. தேஜஸ்வினி, கவிதா ரவி, எம். பவித்ரா.

நொய்டா லாய்டு சட்டக் கல்லூரி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேராசிரியா் என்.ஆா். மாதவ மேனன் நினைவு ஆறாவது சாா்க் மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளியைச் சோ்ந்த மகளிா் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 18 சட்டவியல் பள்ளிகள் கலந்து கொண்டன.

இதில், இறுதிச் சுற்றில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகச் சட்டவியல் அணியை சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது. இந்த அணியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி. பட்டப்படிப்புப் படிக்கும் சி.பி. தேஜஸ்வினி, எம். பவித்ரா, கவிதா ரவி ஆகியோா் இடம்பெற்று வெற்றி பெற்றனா்.

இறுதிச் சுற்றில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிரன் குணரத்னே, அலகாபாத் உயா் நீதிமன்ற நீதிபதிகள் பியூஸ் அகா்வால், தினேஷ் பதக், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி சித்தாா்த் மிா்துல், கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பின்டால் ஆகியோா் நடுவா்களாக இருந்தனா்.

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் இப்போட்டியில் சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி இப்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com