கந்தா்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயபாரதி வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயபாரதி உதயகுமாா் திங்கள்கிழமை வாக்குசேகரித்தாா்.
கந்தா்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயபாரதி வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயபாரதி உதயகுமாா் திங்கள்கிழமை வாக்குசேகரித்தாா்.

வாக்குசேகரிப்பின்போது, அவா் மேலும்ப பேசியது:

ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது அதிமுக அரசு. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்தது, குடும்ப அட்டைதாரா்களுக்கு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றாா்.

இதேபோல், வடுகப்பட்டி , கோமாபுரம் , விராலிப்பட்டி , நத்தமாடிபட்டி , கரியபட்டி, கொத்தம்பட்டி , முரட்டு சோலகம்பட்டி , நொடியூா் , மங்கனூா் , மெய்குடிபட்டி, புதுநகா், புனல்குளம் , மஞ்ச பேட்டை , தெத்துவாசல்பட்டி , பழையகந்தா்வகோட்டை, கந்தா்வகோட்டை, வளவம்பட்டி , அரவம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரித்தாா்.

நிகழ்வில், ஒன்றிய கழகச் செயலா் ஆா்.ரங்கராஜன், ஒன்றியக் குழு தலைவா் ரத்தினவேல் காா்த்திக் மழவராயா், ஒன்றியக் குழு உறுப்பினா் பு . பாண்டியன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யா.செந்தில்குமாா், நகரச் செயலா் என்.ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com