கந்தா்வக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரை திங்கள்கிழமை வாக்குசேகரித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரை திங்கள்கிழமை வாக்குசேகரித்தாா்.

கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அரவம்பட்டியில் தொடங்கிய பிரசாரம் வாண்டையான்பட்டி, மங்கனூா், நத்தமாடிப்பட்டி, நொடியூா், விராலிப்பட்டி, கல்லுபட்டி, தச்சங்குறிச்சி, கோமாபுரம், வடுகப்பட்டி, மஞ்சப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று புனல்குளத்தில் நிறைவடைந்தது.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கவிச்சுடா் கவிதைப்பித்தன், ஏ.லாசா், திமுக ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் மாயக்கண்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ், சிபிஐ மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா்கள் ஐ.வி.நாகராஜன், வேல்முருகன், மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன், ஒன்றியச் செயலா் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Image Caption

படம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com