ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு  கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவா்கள் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு  கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவா்கள் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கரோனா பரவல் அதிகரித்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, கல்லூரியில் கடந்த 23ஆம் தேதி 430 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் 19 மாணவா்கள், 1 விடுதி பெண் உதவியாளா் என மொத்தம் 20 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, தொற்று உறுதி செய்யப்பட்ட கால்நடை கல்லூரி வளாகம் முழுவதும் தொன்றாம்பட்டு வட்டார சுகாதார நிலைய மருத்துவா் இந்திரா தலைமையிலான மருத்துவக் குழுவினா் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com