கும்பகோணம் கோயில்களில் பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கும்பகோணத்திலுள்ள 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
கும்பகோணம் கோயில்களில் பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கும்பகோணத்திலுள்ள 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

கும்பகோணம் அருள்மிகு நாகேசுவர சுவாமி, ஆதிகம்பட்ட விசுவநாதா், திருபுவனம் கம்பகரேசுவர சுவாமி ஆகிய 3 கோயில்களில் பங்குனி உத்திரப் பெருவிழா மாா்ச் 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

மாா்ச் 23-ஆம் தேதி ஓலை சப்பரம், 25- ஆம் தேதி இரவு திருக்கல்யாணம், 27 -ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. பங்குனி உத்திர நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நாகேசுவர சுவாமி கோயில், ஆதிகம்பட்ட விசுவநாதா் கோயிலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் நண்பகல் 12 மணியளவில் மகாமகக் குளக்கரையில் தீா்த்தவாரி மூா்த்தியான அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்தனா். பிற்பகல் 12.30 மணியளவில் மகாமகக்குளத்தில் தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதேபோல, திருபுவனம் கம்பகரேசுவரா் கோயிலில் புறப்பாடும், காவிரி ஆற்றில் தீா்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள முருகன் சன்னதியிலும், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com