‘ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை’
By DIN | Published On : 29th March 2021 03:06 AM | Last Updated : 29th March 2021 03:06 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை அருகிலுள்ள ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் இத்தொகுதி த.மா.கா. வேட்பாளா் என்.ஆா். ரெங்கராஜன்.
பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியத்திலுள்ள பழஞ்சூா், மிலாரிகாடு, புதுக்கோட்டை உள்ளூா், வள்ளிகொள்ளைக்காடு, பேய்கிளிகாடு, நரசிங்கபுரம், சுந்தரநாயகிபுரம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம், கீழத்தோட்டம் மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, மாளியக்காடு, சேண்டாகோட்டை, பள்ளிகொண்டான், முதல்சேரி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக என்னைத் தோ்வு செய்தால், தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றித் தருவேன். குறிப்பாக, ராஜாமடம் பகுதியில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கிராமங்களில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்றாா்.
பிரசாரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் சி. வி.சேகா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி .என் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா் கல்யாணசுந்தரம், பாஜக முரளி கணேஷ், ஏ.ஆா். அன்பு, தமாகா வைத்திலிங்கம், பழனிவேல் நடராஜன், அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.