தஞ்சாவூா், கும்பகோணத்தில் கரோனா தொற்று அதிகம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: மாநில அளவில் நாள்தோறும் 80,000 பேருக்கு குறையாமல் பரிசோதனை செய்யப்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்திலும் திங்கள்கிழமை 2,400 பேருக்கு பரிசோதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது பொதுமக்கள் நிலையான வழிகாட்டு முறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. எனவே, விதிமுறைகளை மீறியதாக மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி இதுவரை ரூ. 26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா், கும்பகோணத்தில்தான் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. பட்டுக்கோட்டை பகுதியில் குறைவாகவே உள்ளது. எந்தெந்த பகுதியில் கரோனா தொற்று பதிவாகிறதோ, அங்கு உடனடியாக மருத்துவ முகாம் நடத்தி, பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com